Agora அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 21, 2016 அன்று உதயமானது, இதனை அலெக்சாண்டர் ஹிரிஸ்டோவ் முகநூலில் அறிவித்தார். ஒவ்வொரு வருடமும் Agora உடைய சர்வதேச மாநாட்டில் Agora-வின் உதயத்தைக் கொண்டாடுகிறோம்.
ஆரம்ப அறிவிப்பில், "வருவாய் அடிப்படையில் குறைந்த கட்டண அமைப்பு" (இது ஆரம்பத்தில் நாட்டின் தனிநபர் ஜிடிபியை சார்ந்ததாக இருக்கப்போகிறது) என்று அழைக்கப்பட்டாலும், 2016 மற்றும் 2017 க்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக 2018 ஆம் ஆண்டில் Agora உண்மையில் அனைத்து பொது கிளப்புகளுக்கும் இலவசமாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொருளாதார மாதிரியானது நன்கொடைகள், மாநில மானியங்கள், கார்ப்பரேட் கிளப் வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் தொழிற்கல்வி பாடப்பயிற்சிகளாக மாறிவிட்டது. பொது சொற்பொழிவுக்கு அப்பாற்பட்டு, Agora எப்பொழுதும் மாற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டதாக இருந்து வருகிறது - மக்களின் பொருளாதார நிலை அல்லது சமூக அந்தஸ்து மற்றும் அவர்களின் எதிர்காலத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து வகையான மக்களையும் சென்றடைகிறது, பொருளாதார இழப்பை பொருட்டாக கருதாமல், அம்மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக திகழுவதற்கு வழிகோலுகிறது.
எங்களது தொடக்கம் அவ்வளவு எளிதானது அல்ல - கல்வி ரீதியான மெட்டீரியல்கள் அனைத்தையும் தொடக்கத்திலிருந்து எழுத வேண்டியிருந்தது. புதிய கல்வி முறை, புத்தம் புதிய தகவல் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் புதிய சமூக ஊடக கருவிகள் என அனைத்தும் உருவாக்கப்பட வேண்டியிருந்தது.
எதிர்பார்த்த "ஆரம்ப வலிகளுக்கு" கூடுதலாக, நாங்கள் சில எதிர்பாராத சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது - பல போட்டி நிறுவனங்கள் Agora-வை தங்கள் வணிக மாதிரியின் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கண்டன: நாங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம், ஆனால் அவர்கள் பல தசாப்தங்களாக அவற்றுக்கு சில கட்டணங்கள் பெற்று வந்தனர். பிற அமைப்புகளில் இருந்த உறுப்பினர்கள் பலர் இதனை அறிந்துக் கொண்டு, Agora -வுக்கு வந்து விட்டனர்.
நிறுவனர் மற்றும் எங்களது ஆரம்பகால ஆதரவாளர்கள் அனைத்து வகையான அவமதிப்புகளையும், வெறுப்பு கடிதங்களையும், தனிப்பட்ட அச்சுறுத்தல்களையும் மற்றும் நாட்டின் முக்கிய வழக்கறிஞர்களிடமிருந்து முறையான சட்ட ரீதியான அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டனர். Agora-வுக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காக மற்ற நிறுவனங்களில் முக்கிய பாத்திரம் வகித்த நபர்கள் வெளியேற்றப்பட்டனர் அல்லது ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டனர். நாங்களும் கூட உள் நாசவேலை மற்றும் முதுகில் குத்துவது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டோம் . Agora என குறிப்பிடுவது தடைசெய்யப்பட்டது, மேலும் இடுகையிடும் நபர் எச்சரிக்கப்பட்டார். Agora-வைப் பற்றி பேச வேண்டாம், எங்களைப் பற்றி இடுகையிட வேண்டாம் என்று மக்களுக்கு வெளிப்படையாக அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு ஒரு தனி த்ரில்லர் புத்தகமே எழுதிவிடலாம். ஒரு கட்டத்தில், எங்கள் உறுப்பினர்களுக்கு இதுபோன்ற தொல்லைகளை நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தெளிவான எச்சரிக்கை விடுக்க எங்கெளுக்கென சொந்தமாக சட்ட ஆலோசகரை ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இந்த முழு கதையும் பின்வருவனவற்றை இடுகையிட எங்களைத் தூண்டியது:

எவ்வாறாயினும், நாங்கள் விடாமுயற்சியுடன், முன்னோக்கிச் சென்று, வளர்ந்து கொண்டே இருந்தோம், மேலும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், Agora 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 க்கும் மேற்பட்ட கிளப்புகளைக் கொண்டிருந்தது. நாங்கள் இப்போது உறுதியாக இருக்கிறோம், நாங்கள் இங்கே நிலையான முறையில் இருக்கிறோம். மேலும் இது ஆரம்பம் மட்டுமே ... தீபந்தம் இப்போதுதான் பரவத் தொடங்கியுள்ளது.
Agora மைல்கற்கள்
இப்பணி இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஏதேனும் படத்தை பெரிதாக்க அதைக் கிளிக் செய்யவும். ஒரு முக்கியமான மைல்கல்லை நாங்கள் விட்டுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் (குறிப்பாக ஒரு நாட்டின் முதல் கிளப்பின் சாசனம் போன்றவற்றை விட்டுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால்), தயவுசெய்து அந்தச் சந்திப்பின் படங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அவற்றைச் சேர்த்துக் கொள்கிறோம்.
2021
2021 | ||
---|---|---|
ஆகஸ்ட் (திட்டமிடப்பட்டது) | Agora உடைய முக்கிய மெட்டீரியல்கள் 20 மொழிகளில் வெற்றிகரமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. | ![]() |
மே 19 | Agora சீனா கனக்டர்ஸ் என்ற பெயரில் சீனாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஆரோன் லியுங்கின் தலைமையில் | ![]() |
பிப் | ஸ்டாண்ட் பை மீ ஸ்பீக்கர்ஸ் என்ற பெயரில் கனடாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஃப்ரெட் ஜோன்ஸ் மற்றும் வெய்ன் ஸ்டான்டன் தலைமையில். | |
பிப் 14 | உறுப்பினருரிமை அமைப்பு தொடங்கப்பட்டது | ![]() |
ஜன 30 | கிளாரா மான்சோ ஏற்பாடு செய்த இரண்டாவது Agora மராத்தான் -முன்னும் பின்னுமாக 36 மணிநேரம் கிளப் சந்திப்புகள் நடைபெற்றது | ![]() |
ஜன 29 | பிரதிபலிப்பு இதழ்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன | ![]() |
2020
2020 | ||
---|---|---|
அக் 21 | Agora சந்திப்பு பாத்திரங்களுக்கான முதல் வீடியோ டுடோரியலை ஃப்ரெட் ஜோன்ஸ் பதிவு செய்கிறார். | ![]() |
அக் 15 | பப்ளிக் ஸ்பீக்கர்ஸ் ஸ்லிகோ என்ற பெயரில் அயர்லாந்தில் முதல் கிளப் திறக்கப்பட்டது - கீரன் டிம்மன்ஸ் தலைமையில். | ![]() |
அக் 15 | Agora Speakers Ñañe'ē என்ற பெயரில் பராகுவேயில் முதல் கிளப் திறக்கப்பட்டது - சுசானா டோரஸ் தலைமையில். | ![]() |
அக் 15 | ஆம்ப்லியன் ஸ்பீக்கர்ஸ் என்ற பெயரில் செச்சியாவில் முதல் கிளப் திறக்கப்பட்டது - ராடெக் பார்ட்மேன் தலைமையில். | ![]() |
அக் 15 | Agora Speakers வியன்னா என்ற பெயரில் ஆஸ்திரியாவில் முதல் கிளப் திறக்கப்பட்டது - கரின் சில்வினா தலைமையில். | ![]() |
ஆக | Agora Speakers சான் சால்வடார் என்ற பெயரில் எல் சால்வடாரில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - வில்லியம் மார்டினெஸ் தலைமையில். | |
ஆக | Agora Speakers கோர்டோபா என்ற பெயரில் அர்ஜென்டினாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஃபேபியானா அலிசியா ஃபா லுச்சினி தலைமையில். | |
ஆக 21-22 | கிளாரா மான்சோ, ரவி பட்டரை, மைக்கேல் நிக்கல்சன் மற்றும் ஹெலேன் கெம்மெரே ஆகியோர் ஏற்பாடு செய்த முதல் Agora மராத்தான் -முன்னும் பின்னுமாக 24 மணிநேரம் கிளப் சந்திப்புகள் நடைபெற்றது | ![]() |
ஆக 21 | Agora இளைஞர் திட்டத்தின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது - ஃப்ரெட் ஜோன்ஸ், கோகா பிரசாத், ரவி பட்டரை தலைமையிலான பல மாத முயற்சியின் உச்சம் | ![]() |
ஜூலை 25 | Agora விக்கியின் முற்றிலும் புதிய பதிப்பை வெளியிட்டது, இதில் கிளப்பிற்கு பலனளிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கருவிகளின் தானியங்கி உருவாக்கம், பல மொழி ஆதரவு மற்றும் மின்னணு மதிப்பீட்டு படிவங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. | ![]() |
ஜூன் 11 | Agora Speakers கோனக்ரி என்ற பெயரில் கோனக்ரியில் முதல் கிளப் திறக்கப்பட்டது - டயானே பங்காலி அலிசியா ஃபா லுச்சினி தலைமையில். | ![]() |
ஏப் 1 | தொற்றுநோய் தொடரும் சூழ்நிலையில், ஆன்லைனில் சந்திக்க விரும்பும் அனைத்து பொது கிளப்புகளுக்கும் கட்டண ஜூம் கணக்குகளை Agora இலவசமாக கிடைக்கச் செய்கிறது. | ![]() |
ஜன 20 | ரெடிகிளப் லேண்ட்ஷட் என்ற பெயரில் ஜெர்மனியில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - மோனிகா க்ரூட்டர் தலைமையில். | ![]() |
ஜன 20 | Agora Speakers கார்கிவ் என்ற பெயரில் உக்ரைனில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - முகமது சைஃப் தலைமையில். | ![]() |
ஜன 13 | எங்கள் கருப்பொருள் போட்டிகளுக்கான போட்டி விதி புத்தகம் வெளியிடப்பட்டது. | ![]() |
2019
2019 | ||
---|---|---|
டிச 19 | Agora Speakers சிங்கப்பூருக்கான இந்த மெகா-புத்தாண்டு விருந்து மூலம் அனைத்து வருகைப் பதிவுகளையும் ஜியா பான் பெங் முறியடித்தார். | ![]() |
டிச 14 | குயிட்டோ Agora Speakers என்ற பெயரில் ஈக்வடாரில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - தானியா சோலெடாட் குரேரா தலைமையில். 33 நிறுவன உறுப்பினர்களுடன் கிளப் அனைத்து சாசன பதிவுகளையும் முறியடித்தது, இதற்கு அடுத்த படியாக ஹெக்டர் செடெனோ தலைமையிலான குயாகுவில் கிளப் 23 ஸ்தாபக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. |
![]() |
டிச 13 | சியோல் Agora Speakers என்ற பெயரில் தென் கொரியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - சாரா வால்ஷ் தலைமையில். | ![]() |
டிச 12 | அகோரமேனியா என்ற பெயரில் ருமேனியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - கேப்ரியேலா லாஸ்லாவ் தலைமையில். | ![]() |
டிச 7 | Agora Speakers கார்கிவ் என்ற பெயரில் உக்ரைனில் முதல் கிளப் திறக்கப்பட்டது - முகமது சைஃப் தலைமையில். | ![]() |
டிச 5 | வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது | ![]() |
அக் 23 | பிலிப்பைன்ஸில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - செலியா அலமோ ஜேக்கப் மற்றும் ஃபேபியோ அரோமாட்டி ஆகியோர் தலைமையில். | ![]() |
அக் 18 | துருக்கியில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஆஷ்னி நிக்கோல் (அஷினி அட்ஹாங் நிக்கோலின்) தலைமையில். | ![]() |
அக் 14 | மிட்ச் கார்சனின் தீர்க்கமான உதவிக்கு நன்றி, CNN பிலிப்பைன்ஸில் Agora Speakers International திரையிடப்பட்டது. | ![]() |
செப் 30 | Agora Speakers அக்ரா என்ற பெயரில் கானாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - இம்மானுவேல் ஆன்ட்வி தலைமையில். | ![]() |
செப் 29 | Agora Speakers ரபாத் என்ற பெயரில் மொராக்கோவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது. | ![]() |
செப் 21-22 | முதல் சர்வதேச மாநாடு போர்ச்சுகலின் லிஸ்பனில் நடைபெற்றது. | ![]() |
செப் 19 | அபிகாயில்ஸ் விண்டோ ஆஃப் ஹோப் கிளப் என்ற பெயரில் போட்ஸ்வானாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - மொய்தீலா மோ -அபி தலைமையில். | ![]() |
செப் 19 | கலந்துரையாடல் மன்றங்கள் திறக்கப்பட்டன. | ![]() |
செப் 8 | "இன்று நாம் பார்வையிட இருப்பது" என்னும் கல்விச் செயல்பாடு சேர்க்கப்பட்டது. | ![]() |
செப் 6 | 2035 ஸ்பீக்கர்ஸ் என்ற பெயரில் கேமரூனில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - திரு. டியங்கா கிளிஃபோர்ட் தலைமையில். | ![]() |
ஜூன் | சானி Agora கென்யா சாப்ட்டர் என்ற பெயரில் கென்யாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது. | |
ஏப் 10 | RSI (ரூரல் சர்வீசியோஸ் இன்ஃபார்மெடிகோஸ்) என்பவற்றின் ஒரு பகுதியாக முதல் கார்ப்பரேட் Agora கிளப் திறக்கப்பட்டது - ஜோஸ் மானுவல் ரோபெரோ டாகுவா தலைமையில். | ![]() |
மார் | Agora Speakers கோட்டா கினபாலு என்ற பெயரில் மலேசியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஜோஹன் அமிலின் தலைமையில். | ![]() |
மார் | ஆன் ஃபயர் இங்கிலீஷ் ஸ்பேக்கர்ஸ் இன் தைப்பே என்ற பெயரில் தைவானில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஜாக்கி சென் தலைமையில். | ![]() |
பிப் | Agora Speakers பாமாகோ என்ற பெயரில் மாலியில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது | ![]() |
2018
2018 | ||
---|---|---|
நவ 18 | தாய்லாந்தில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - தனுபோல் சியாம்வாலா தலைமையில். | ![]() |
நவ 15 | ஏஞ்சல் ஜின்செல் தலைமையில் சியரா லியோனில் Agora இளைஞர் திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டது. | ![]() |
ஜூலை 30 | Agora Speakers International ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. | ![]() |
ஜூலை 8 | Agora இளைஞர் திட்ட முன்முயற்சி பிரெட் ஜோன்ஸ் தலைமையில், ஜார்ஜ் டயஸ், ரவி பட்டரை மற்றும் கோகா பிரசாத் ஆகியோரின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. | ![]() |
ஜூன் | ஜப்பானில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - டிரையன் வான் கோல்டன் தலைமையில். | ![]() |
மார் 26 | முதன் முதலாக பல -கிளப் பங்குபெறும் பிராந்திய அளவிலான Agora சந்திப்பு - பாரேரோ, போர்ச்சுகல் | ![]() |
2017
2017 | ||
---|---|---|
டிச | ஜகார்த்தா Agora Speakers என்ற பெயரில் இந்தோனேசியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஆட்டி ரிங்கோ தலைமையில். | ![]() |
அக் | அடிஸ் Agora Speakers கிளப் என்ற பெயரில் எத்தியோப்பியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ராஜேந்திர சிங் தலைமையில். | ![]() |
முன்பு | Agora சிங்கப்பூர் ஸ்பீக்கர்ஸ் என்ற பெயரில் சிங்கப்பூரில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது -ஜியா பான் பெங் தலைமையில். | ![]() |
முன்பு | Agora Speakers மன்ரோவியா என்ற பெயரில் லைபீரியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது | ![]() |
முன்பு | Agora Speakers பாரேரோ என்ற பெயரில் போர்ச்சுகலில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஜார்ஜ் டயஸ் தலைமையில். | ![]() |
ஜூலை | அம்மன் ஸ்பீக்கர்ஸ் என்ற பெயரில் ஜோர்டானில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஒசாமா அல் மோசா தலைமையில். | ![]() |
மே | Agora Speakers குவாடலஜாரா என்ற பெயரில் மெக்சிகோவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது. | |
ஏப் | Agora Speakers கடுனா என்ற பெயரில் நைஜீரியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது. | |
மார் 26 | "தி ஃபியூச்சர் ஸ்பீக்கர்ஸ்" என்ற பெயரில் ஜிம்பாப்வேயின் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - பேசன்ஸ் டியூப் தலைமையில். | |
மார் | Agora Speakers டானா என்ற பெயரில் மடகாஸ்கரில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - மோனிக் (லெனே) வைரா தலைமையில். | ![]() |
பிப் 19 | "Agora Speakers கவுனாஸ்" என்ற பெயரில் லிதுவேனியாவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - பியஸ் அபேஷி தலைமையில். | ![]() |
பிப் | Agora சென்ட்ரல் கோஸ்ட் ஸ்பீக்கர்ஸ் என்ற பெயரில் அமெரிக்காவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது. | |
ஜன 17 | Agora வழிகாட்டியின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. | ![]() |
ஜன | Agora Speakers சிசெபோ என்ற பெயரில் மலாவியில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - கோஸ்டன் சிகாசோவா தலைமையில். | ![]() |
2016
2016 | ||
---|---|---|
டிச | இங்கிலாந்தில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - ஹாலீன் கெம்மெர் தலைமையில். | ![]() |
நவ 15 | "கிங்ஸ் ஸ்பீக்கர்ஸ்" என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது - கிறிஸ் காலகன் தலைமையில். | ![]() |
அக் | Agora Speakers காத்மாண்டு என்ற பெயரில் நேபாளத்தில் முதல் Agora கிளப் திறக்கப்பட்டது. | ![]() |
அக் 1 | இந்தியாவில் முதல் Agora கிளப்பும், உலகளாவிய அளவில் நான்காவது கிளப்புமான "விசாகா ஓரேட்டர்ஸ்" திறக்கப்பட்டது - கோகா பிரசாத் தலைமையில். | ![]() |
செப் 28 | போலந்தில் முதல் Agora கிளப்பும், உலகளாவிய அளவில் இரண்டாவது கிளப்புமான "மெளசி கோர்ஸோவ்" திறக்கப்பட்டது - மைக்கேல் பாபிஸ் மற்றும் வாண்டா லோபஸ்ஸான்ஸ்கா தலைமையில். | ![]() |
செப் 23 | "Agora Speakers International"-க்கான வர்த்தக முத்திரை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது | ![]() |
ஆக 21 | Agora Speakers International அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது |
![]() |